25 ஜூன் 2014

இது சாதீய பதிவு: விருப்பமில்லாதவர்கள் புறக்கணிக்கவும்.



இந்த ஃபேஸ்புக் மட்டும் இல்லைன்னா, தேவரின அமைப்புகளின் நிலை என்னவாகிருக்கும்? முக்குலத்தோர்களுக்கு எதிர்காலமே இல்லாமல் அல்லவா போயிருக்கும். நொன்னைங்களா, ஃபேஸ்புக்ல பில்டப் கொடுக்காம, களத்தில் எதாவது உருப்படியா ஒத்துமையா பண்ணலாமே? நாங்க தான் யோக்கியன், நான் தான் பெரியவன் என்பது போல ஈகோ மயிரு மட்டையையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு தெருவுக்கொரு அமைப்பு, கட்சி, பேரவை, இயக்கம், கழகம், பாசறைன்னு தொடங்கி சொந்த சாதிகாரனையே நொட்டம் சொல்லாமலாவது இருக்கலாமே? அக்டோபர் மாசமும், தேர்தல் நேரத்துலயும் மட்டுமே வெளியே வர அமைப்புகள் நிரந்தரமாவே கடையை காலி பண்ணியாவது தொலைக்கலாமே? இன்னொரு அமைப்பை குறை சொல்லியே தங்களோட அமைப்பை வளர்க்கலாம்ன்னு நினைக்கிறதுனாலதான் ஒட்டுமொத்த இனமும் கண்டவன் கிட்டயெல்லாம் சந்தி சிரிக்குது. ஃபேஸ்புக்ல மட்டும் பில்டப் தர இவிய்ங்களோட சாதி கட்சியின் நிலையை ஊர்ல போய் பார்த்தால் நாத்தம் தெரியும். இதை சொல்றதுனால நீ என்ன கிழிச்சன்னு என்கிட்ட எவனும் வராத... ஃபேஸ்புக்ல போட்டோவும் அறிக்கையும் மட்டும் போட்டு எந்த அமைப்பையும் நான் நடத்தல. அதுக்காக, அட்லீஸ்ட் எந்த அமைப்புலயாவது உறுப்பினராவது இருக்கியா?ன்னு என்கிட்ட கேள்வி கேட்கவும் முடியாது. ஏன்னா எவனை நம்பியும் எந்த அமைப்பிலயும் சேரவும் முடியல. ஃபேஸ்புக்ல பில்டப் கொடுக்குற முக்கால்வாசி பயலுக காசுக்காக இனத்தை அடமானம் வைக்கிற அயோக்கியனாத்தான் இருக்காய்ங்க. ஏதாவது சாதி அமைப்பில இருந்த மட்டும் தான் தேவன்னு எந்த மண்ணாங்கட்டி கொள்கையும் இல்ல. நான் பிறக்கும் போதே தேவன் தான்!

அட த்த்தூ...

- இரா.ச.இமலாதித்தன்

24 ஜூன் 2014

கவிக்கு வயது 88!

'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்களை எழுத்து, சமுதாய உணர்வு, தெளிவான பேச்சு, சுயத்தை இழக்காத வெளிப்படையான தன்மை உள்பட பல விசயத்துல முன்மாதிரியாக நான் எடுத்துக்கொண்டாலும், மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆளுமைமிக்க வீரத்தை வெளிக்காட்ட "சிவகங்கை சீமை" என்ற திரைக்காவியத்தை தயாரித்து, தமிழால் என்னை ஆட்கொண்ட 'செட்டிநாடு தந்த செல்வர்' 'கவியரசு' கண்ணதாசனின் 88வது பிறந்தநாள் இன்று!

22 ஜூன் 2014

இளையதளபதி பிறந்தநாள்!

ஜூன் 22ல் 40வது அகவை காணும் எங்கள் 'இளைய தளபதி' விஜய் அவர்கள் எம்பெருமான் முருகன் அருளோடு வாழ்க வளமுடன்... இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தலைவா!

Time to Lead :-)

20 ஜூன் 2014

ஹிந்தி திணிப்புக்குள் அகதிகள் தினம்!

ஹிந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் எதிர்க்க வேண்டிய அவசியம் தமிழனுக்கில்லை, அவன் மீது தமிழ் அல்லாத மொழியை திணிக்காத வரை. ஹிந்தி மட்டுமே அறிவு என்பது போல நினைக்க வேண்டிய தேவையில்லை. வல்லபாய் படேல் இல்லையென்றால் இந்தியா என்ற ஒரு கட்டமைப்பு உருவாகி இருக்குமா என்பது சந்தேகமே; ஏனெனில் ஒவ்வொரு மாகாணமும் தனித்தனி மொழி/பாரம்பரியம்/கலாச்சாரம் என பலவாறாக அடையாளப்படுகிறது. அதனாலேயே இந்தியாவில் ஹிந்தி மட்டுமே ஆட்சி மொழி கிடையாது என்றும், ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக வைத்து கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இன்னைக்கு புதுசா வந்து எல்லாத்தையும் ஹிந்தி மயமாக்க நினைப்பது தவறு. அதை கண்டிப்பது ஹிந்தி அல்லாத ஒவ்வொரு தாய்மொழிக்காரனுக்கும் உரிமை உண்டு. என் மொழி எனக்கு உன் மொழி எனக்கு. ஏற்கனவே கொஞ்சகொஞ்சமாய் அழிந்துவரும் எம்தாய்மொழியை இதுபோன்ற அரசாங்க அறிவிப்பும் அழிவுக்கே வழி வகுக்கும்.
தமிழினம் மட்டுமல்ல
தமிழும் தான்
தவித்துக்கொண்டிருக்கின்றது
இறுதி சடங்குக்காக!

#அகதிகள் தினம் இன்று!


 - இரா.ச.இமலாதித்தன்

பேரரசர் இராஜேந்திர சோழனின் 1000வது ஆடி திருவாதிரை திருவிழா!



"பூர்வதேசமும் கங்கையும் கடாரமுங் கொண்ட கோப்பரகேசரிவர்மன்" எனக் கல்வெட்டுகளல் புகழப்படுபவன் முதலாம் இராசேந்திர சோழன். இராசராசசோழனுக்கும் திரிபுவனமாதேவி என்ற பெயர் பெற்ற சேரர்குலப் பெண் வானவன்மாதேவிக்கும் மகனாக திருவாதிரையில் பிறந்தவன். இவனது இயற்பெயர் மதுராந்தகன். கி.பி.1012-இல் இளவரசாக முடிசூட்டியபோது அபிடேக பெயராக இராசேந்திரன் என்ற பெயரைக் கொண்டான். கி.பி.1014வரை தன் தந்தையுடன் இணைந்து ஆட்சி புரிந்தான். இவன் கங்கைகொண்டசோழன், மும்முடிசோழன், உத்தமசோழன், பண்டித்சோழன்,வீரசோழன், பூர்வதேசம் கங்கையும் கடாரமும் கொண்ட ஐயன் என்ற பட்டபெயர்களைச் சூடியவன். இவனது ஆட்சிக்காலம் 1012 முதல் 1044 வரை. "வடதிசை கங்கையும், தென்திசை ஈழமும், குடதிசை மகோதையும், குணதிசை கடாரமும்" இம்மன்னனது நாட்டின் எல்லைகளாகக் குறிக்கப்படுகின்றன. இவன் இளவரசனாக இருந்தபோது சுமார் ஒன்பது லட்சம் வீரர்களுக்கு தலைமை தாங்கி வடக்கே பீசப்பூர் வரை படையெடுத்து வெற்றிவாகை சூடி சாளுக்கியரை வென்ற புகழாளன். இந்திய நாட்டின் பல பகுதிகளை வென்றதோடு கடல் கடந்து பல கீழ்த்திசை நாடுகளையும் தன் அடிமைப்படுத்தி சோழர் தம் கொடியைப் பறக்க விட்ட மாபெரும் சோழப் பேரரசனும் இவனே!

24.07.2014, 25.07.2014 ஆகிய இரு தினங்களும் கங்கைகொண்ட சோழபுரத்தில் இராஜேந்திர சோழனின் பிறந்தநாளானா ஆடி - திருவாதிரை திருவிழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அருகிலுள்ள தமிழின உறவுகள் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்!

நன்றி: இராஜாராம் கோமகன்

19 ஜூன் 2014

தமிழ் இசுலாமியர் மீதான தாக்குதலை எப்படி பார்ப்பது?

இயற்கை எனது நண்பன்;
வாழ்க்கை எனது தத்துவாசிரியன்;
வரலாறு எனது வழிகாட்டி!

- அண்ணன் வே. பிரபாகரன்

இலங்கையில் நடைபெறும் தமிழ் இசுலாமியர் மீதான சிங்கள-பெளத்த இனவெறியர்களின் தாக்குதலை நான் எப்படி பார்ப்பது? யென்ற கேள்வி என்னை போலவே பலருக்கும் இருக்கலாம்.

அன்று ஈழத்தமிழர்களை இதே சிங்கள-பெளத்த இனவெறியர்கள் அழித்தொழித்த போது, கைத்தட்டி ஆராவாரித்து வெற்றி முழக்கமிட்டது இதே தமிழ் இசுலாமியர்கள் தானே? மேலும், இங்குள்ள தமிழ்நாட்டு இசுலாமிய அமைப்புகளும் கூட அது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனையென ஒதுங்கி கொண்டு கைக்கட்டி வேடிக்கை பார்தது ரசித்தது. ஆனால், இன்றைக்கு தமிழ்நாட்டு இசுலாமிய அமைப்புகள், அங்குள்ள இசுலாமியர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து தமிழ்தேசிய அமைப்புகளின் பெயர்களையும் போட்டு இங்கே போராட்டம் நடத்திக்கொண்டிருக்கின்றது. இந்த தமிழ்நாட்டு இசுலாமிய அறிவுஜீவிகளுக்கு இப்போது மட்டும் அது இலங்கையின் உள்நாட்டு பிரச்சனயென்று தெரியவில்லையா?

மதத்தின் பெயரால் சக நாட்டினத்தவரிடம் பிரிவினை ஏற்படுத்தி மதவெறியால் தமிழ்மொழியை அழிக்கும் இசுலாமியர்கள் ஒருபோதும் தமிழரில்லை என்பதுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அப்படியென்றால், சக தமிழனாக, இலங்கையில் நடக்கும் இசுலாமியர் மீதான தாக்குதலை எதிர்க்க வேண்டிய அவசியமும் எந்தவொரு தமிழனுக்கும் அவசியமில்லை. என்னை பொறுத்தவரை இசுலாமியர் மீதான தாக்குதலை எதிர்க்க மனமே வரவில்லை. எப்போதுமே, எதிரியை விட துரோகி மிக மோசமானவர்கள் என்பதை கடந்த கால வரலாறு சொல்கிறது. நான் வரலாற்றை நேசிப்பவன்; வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்பவன்; நீங்கள் எப்படி?

- இரா.ச.இமலாதித்தன்

18 ஜூன் 2014

இலங்கையில் இசுலாமியர் மீதான தாக்குதலும், பசும்பொன் தேவரும்!



குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மொத்தம் பதினான்கு பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்திற்கு பிறகு, சிவகாசியில், தேவர் திருமகனாருக்கும், காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாதம் நடக்கிறது.

‘ரேகைச் சட்டத்தை எதிர்த்து நீங்கள் ஏன் போராடுகிறீர்கள்? உங்களுக்கு என்ன பிரச்சனை?’ என்கிறான். பசும்பொன் தேவர் அவர்கள் சொல்கிறார்கள்:‘பக்கத்து வீடு பற்றி எரிந்தால் பார்த்துக் கொண்டு இருக்க முடியுமா?’ பக்கத்து வீடு பற்றி எரியும்போது அணைக்காவிட்டால், அடுத்து தன்னுடைய வீடும் தானாக எரியும். இன்றைக்கு இந்த ரேகைச் சட்டம் அப்பாவிகள் மீது பாய்கிறது. நாளைக்கு என் மீதும் பாயாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்று கேட்கிறார்.

இந்த வாதம் நடக்கிறபோது, பெரிய காவல்துறை அதிகாரி வருகிறார். ‘எங்கள் ஏகாதிபத்தியம் உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறது. மிக சக்தி வாய்ந்தது. உங்களுக்குத் தெரியுமா?’ என ஆங்கிலத்தில் கேட்கிறான். பசும்பொன் தேவரும் ஆங்கிலத்தில் பதில் சொல்கிறார். ‘தெரிவேன் நன்றாகத் தெரிவேன், மேலும் தெரிவேன். இதைவிட எத்தனையோ ஏகாதிபத்தியங்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து, புல் முளைத்த சரித்திரமும் நான் அறிவேன்’ என்கிறார்.

எங்கள் பேரரசுக்குக் கடல் போன்ற இராணுவ பலம் இருக்கிறது தெரியுமா? என்கிறான் வெள்ளைக்காரன். உடனே சொல்கிறார் பசும்பொன் தேவர்: ‘கடல் போன்ற படை இருக்கிறதா? மானத்தைப் பெரிதாகக் கருதுகிறவனுக்கு, சாவு பொருட்டு அல்ல. சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால் மட்டம் என்பதை நீ தெரிந்து கொள்’ என்றார்.

இதை ஏன் இங்கு சொல்கிறேன் என்றால், 2009 காலக்கட்டத்தின் போது, லட்சக்கணக்கான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட போது, தங்களை தமிழர்களாக மனதில் கொள்ளாமல், இலங்கை வாழ் இசுலாமியர்கள் அனைவரும் தங்களை மதவாதிகளாகவே கணக்கில் கொண்டு, பெளத்த-சிங்கள இனவெறியர்களுக்கு ஆதரவாக நின்று, மகிந்த ராஜபக்சேவை பாராட்டி ஊர்வலம் போனார்கள். ஆனால் இன்றைய நிலைமையில் தமிழர்களை அழித்த அதே பெளத்த-சிங்கள இனவெறியர்கள் தமிழ் இசுலாமியர்கள் மீதும் அடக்குமுறையை ஏவியுள்ளனர். அன்றைக்கு, தமிழன் வீடு பற்றி எரியும்போது கைக்கட்டி வேடிக்கை பார்த்ததன் விளைவு, இன்று தன் வீடும் பற்றி எரிகிறது. எதிலும் ஒரு தொலைநோக்கு பார்வை வேண்டும் என்பதை அன்றைக்கே பசும்பொன் தேவர் ஒரு முன்னுதாரணமாக இருந்து சென்றுவிட்டார். இனியாவது தமிழ் இசுலாமியர்கள் இந்த எதார்த்தத்தை புரிந்து கொள்வார்களா?

- இரா.ச.இமலாதித்தன்