26 செப்டம்பர் 2015

ஆதீனமும் சாதீனம் ஆனது!




திருவாடுதுறை ஆதீனத்தின் ஆதரவோடும், வ.உ.சிதம்பரம் பிள்ளையின் ஆசியோடும், "தமிழ்நாடு சைவ வேளாளர் சங்க"த்தின் முப்பெரும் விழா! ஆன்மீகத்திற்கு ஏது சாதி?

25 செப்டம்பர் 2015

மின்மிகை மாநிலம்!?



எங்க ஊரு நாகப்பட்டினமெல்லாம் தமிழ்நாட்டில் இல்லாமல், தாய்லாந்துலயா இருக்கு?! தினமும் புடுங்கிக்கிட்டு தான் இருக்காய்ங்க, கரண்ட்ட...

24 செப்டம்பர் 2015

மெக்கா சோகம்!

மெக்காவில் 700 பேருக்கு மேல் உயிரிழந்த நிகழ்வும், சோழநாடான எங்க டெல்டாவின் திருவாரூர் - மஞ்சக்குடியில் பிறப்பெடுத்த தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் இழப்பும், இன்றைய நாளை சோகத்தோடு கடக்க வைக்கிறது. அனைத்து ஆன்மாக்களும் இறைவனோடு ஐக்கியமாகட்டும்.

அகமுடையார் சங்கமானது முக்குலத்தோர் சங்கமான வரலாறு!


1926 ல் திருத்துறைப்பூண்டியில் முதல் அகமுடையார் சங்க மாநில மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாடு உருவாக, கரந்தை திரு. உமாமகேசுவர பிள்ளை, பட்டுக்கோட்டை திரு. நாடிமுத்து பிள்ளை, திருத்துறைப்பூண்டி திரு. ராஜகோபால் பிள்ளை, நாகப்பட்டினம்-அந்தணப்பேட்டை திரு. திருஞானசம்பந்த பிள்ளை ஆகிய நால்வரும் முக்கிய பங்கு வகித்தனர்.
பிறகு, அகமுடையார் சங்க மாநில மாநாடு 1929ல் பட்டுக்கோட்டையிலும், 1931ல் மதுரையிலும், 1932ல் இராமநாதபுரத்திலும் நடந்தது.

அனைத்து மாநாட்டிலும் அந்தெந்த பகுதியை சார்ந்த பொதுவானதொரு சிறப்பு விருந்தினரை அழைப்பது வழக்கமாக்கி கொண்டிருந்ததால், இந்த நான்காவது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சேதுபதி மன்னர் வகையினரான, நீதிக்கட்சி அமைச்சரான திரு. சண்முகராஜ நாகநாத சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாநாட்டில் சேதுபதி வைத்த கோரிக்கையை ஏற்று பின்னால் திரு. சிவனாண்டி சேர்வையின் முன்னெடுப்பால் அகமுடையார் மாநில சங்கமானது, முக்குலத்தோர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது.

டிசம்பர் மாதம் 1933 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில், மாநில அகமுடையார் சங்கமானது, முக்குலத்தோர் சங்கமென முழுமையாக உருமாற்றம் பெற்றது. அந்த மாநாட்டின் பெயரானது மூவேந்தர் குல மாநாடு என பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இன்றைக்கு பவளவிழா கண்டு இயங்கி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கத்திற்கான விதையானது, 1926 ல் உருவாக்கப்பட்ட மாநில அகமுடையார் சங்கத்திடமிருந்து கிடைத்தது என்பது தான் மறுக்க முடியாத, மறக்கடிக்கப்பட்ட வரலாறு. இந்த விருட்சத்தின் பலனான நிழலானது, விதைக்கும் - வேர்க்கும் கிடைக்கவே இல்லை என்பதுதான் வருத்தமான விசயம்.

- இரா.ச.இமலாதித்தன்

22 செப்டம்பர் 2015

ஸ்டாலினின் அரசியல் பிம்பம், சமூக தளங்களால் உடைபடும் நேரம்!

மு.க.ஸ்டாலினுக்கென்று இதுநாள் வரை இருந்து வந்த மாபெரும் அரசியல் தலைமைத்துவத்தை, கடந்த சிலநாட்களாக வடிவேலு, கவுண்டமணி, சந்தானம் என ஒப்பிட்டு கலாய்ப்பதை பார்க்கையில் கொஞ்சம் நெருடலாகவே இருக்கிறது. அவர் சொந்த செலவிலேயே சூனியம் வைத்து கொண்டது போல ஓர் உணர்வு. எல்லாரும் தீணியாக்கப்படும் சோசியல் மீடியாவை சமாளிப்பது அவ்வளவு எளிதல்ல! என்பதை அடுத்த தலைமுறை அரசியல் தலைமைகள் இனியாவது புரிந்து செயல்பட வேண்டும்.

20 செப்டம்பர் 2015

சிவகார்த்திக்கேயன் தாக்கப்பட்ட பின்னணி!

மதுரை விமான நிலையத்திற்கு கமல்ஹாசனை வரவேற்க வந்த ரசிகர்கள், கமல் போன பிறகும் சில மணிநேரம் கழித்து வந்த சிவகார்த்திகேயனுக்காக காத்திருந்து அவரை அடிக்கிறாங்கன்னா, அதுக்கு ஸ்ருதிஹாசன் மட்டுமே காரணம் அல்ல; ரஜினியும் தான்!

சிவக்கார்த்திகேயன் என்ன சாதி?ன்னு சாட்ல தமிழ்தேசிய தோழர் ஒருத்தரு கேட்டாரு. "எங்க நாகை மாவட்டம் மயிலாடுதுறை - சீனிவாசபுரத்தில் தான் சிவக்கார்த்திகேயனின் சித்தப்பா வீடெல்லாம் இருக்கு. என் நண்பர்கள் பலருக்கு சிவகார்த்திகேயனை சிறு வயது முதலே தெரியும். முன்னாள் முதல்வர் திரு.மு.கருணாநிதியின் சாதியை சார்ந்தவர் சிவகார்த்திகேயன்"ன்னு சொன்னேன்.
இனி இசைவேளாளர் சாதியினர், தமிழரா? தெலுங்கரா? என்பதெல்லாம் தமிழ்தேசிய தோழர் பார்த்து கொள்வாரென நம்புகிறேன்.



சிவகார்த்திகேயன் என்ற வடுகருக்கும், கமல்ஹாசன் என்ற பார்பனருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் என எளிதாக சொல்லிவிட்டு தமிழ் தேசியவாதிகள் கூட ஒதுங்கி விடுவார்கள். ஆனால், இந்த திராவிடர்கள் தான் இதையே தங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்வார்கள்.

நரிக்குடியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் பதாகை அவமதிப்பு

நரிக்குடியில் மாமன்னர் மருதுபாண்டியர்களின் பதாகை அவமதிப்பு செய்யப்பட்டதற்காக, சென்னை, திருவண்ணாமலை-ஆரணி, திருப்பத்தூர், சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, கோவை, மதுரை விளாங்குடி, இராமநாதபுரம், சிவகாசி, விருதுநகரென தமிழகமெங்கும் கண்டன போஸ்டர்களும், தன்னெழுச்சியாக நடைப்பெற்ற களப்போரட்டங்களும், அமைப்பு வேறுபாடின்றி பல்வேறு வகையில் எதிர்ப்புகளை பதிவு செய்து களத்தில் நின்ற அகமுடையார் அரண், வீரகுல அமரன் இயக்கம், அகில இந்திய அகமுடையார் மஹா சபை, தமிழக தலைமை அகமுடையார் சங்கம், அகமுடையார் மக்கள் மகாசபை, அனைத்து மாமன்னர் மருதுபாண்டியர் சங்கங்கள் என அனைத்து அகமுடையார் இயக்கங்களுக்கும், புதிய நீதிக்கட்சிக்கும், முகநூலில் உடனுக்குடன் கள நிலவரங்களை பகிர்ந்து மிகப்பெரிய போராட்ட களத்தை ஏற்படுத்திய அனைத்து உறவுகளுக்கும் எம் சிரம் தாழ்ந்த நன்றி!

18 செப்டம்பர் 2015

முதல் ஹிந்தி எதிர்ப்பு, பாம்பன் சுவாமிகளுடையது!

இந்தியை முதன் முதலில் எதிர்த்தவர் 'தமிழ்த்துறவி' பாம்பன் அடிகளார்
சனவரி 25ஆம் நாள் என்பது இந்தி எதிர்ப்பு ஈகியரின் நினைவு நாளாகும். இந்த ஆண்டில் தான் 1965ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரின் 50ஆம் ஆண்டு விழாவும் தொடங்க உள்ளது. 1938ஆம் ஆண்டு தமிழறிஞர்களாகிய மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு தீ இன்னும் தமிழர்களிடத்தில் அணைய வில்லை. தமிழர்களின் மரபு என்பது அடிப்படையில் ஆரிய- வடமொழி எதிர்ப்பு தன்மை உடையதே இதற்குக் காரணமாகும்.

ஆன்மிகத் தளத்தில் நின்று கொண்டு வடமொழியை இராமலிங்க வள்ளலாரும், அதுபோல் இந்திமொழியை தமிழ்த்துறவி பாம்பன் அடிகளார் என்பவரும் எதிர்த்து வந்துள்ளனர்.

இந்த உண்மைகளை மூடிமறைத்து இந்தி எதிர்ப்பு உணர்வை முதன் முதலில் தோற்றுவித்தவர் ஈ.வெ.ரா.பெரியார் என்றும், அவரே சித்திரபுத்திரன் எனும் புனைப்பெயரில் 7.3.1926இல் தனது குடியரசு இதழில், "தமிழுக்குத் துரோகமும் இந்திமொழியின் ரகசியமும்" என்ற தலைப்பில் கட்டுரை தீட்டினார் என்றும் வரலாறு எழுதுவோர் ஆராய்ச்சி செய்யாது நுனிப்புல் மேய்வோராய் எழுதி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராய் ஆன்மிகத் தளத்தில் நின்று 1899ஆம் ஆண்டில் முதற்குரல் கொடுத்தவர் குமரகுருதாச சுவாமிகள் என்றழைக்கப்படும் பாம்பன் அடிகளார் என்பதே உண்மையான வரலாறாகும்.
பாம்பன் அடிகளார் இராமேசுவரம் பாம்பனில் 1853ஆம் ஆண்டு பிறந்தவர். சைவநெறி மீதும், முருகன் மீதும் தீராப்பற்று கொண்டவர். வடமொழியிலும், தமிழ்மொழியிலும் சிறந்த தேர்ச்சி பெற்றவர். அவர் 6600 அருந்தமிழ் பாடல்களை இயற்றியுள்ளார். இவரால் வடமொழி கலவாமல் தனித் தமிழ் நடையில் எழுதப்பட்ட "சேந்தன் செந்தமிழ்" எனும் நூல் சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். 1929ஆம் ஆண்டு மறைந்த இவருக்கு சென்னை திருவான்மியூரில் சமாதி கோயில் கட்டப்பட்டுள்ளது.

பாம்பன் அடிகளார் இந்தியை எதிர்த்ததன் காரணம் என்னவெனில், இந்தி நுழைந்து விட்டால் தமிழர்களின் சைவ சமயமும், தமிழ்மொழியும் அழிந்து விடும் என்று அஞ்சினார். வேறு பாடையான இந்தியை வளர்க்க முற்படும் வடநாட்டவரின் சுயநலத்திற்கு ஆதரவளிக்கக் கூடாது என்பதையும், தமிழ்மொழியை இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் பரப்பும் பணியில் தமிழர்கள் ஈடுபட வேண்டும் என்பதையும் 1899ஆம் ஆண்டு வெளியிட்ட தனது 'திருப்பா' எனும் சாத்திர நூலில் குறிப்பிட்டுள்ளார். இதன் வரிகள் இதோ:
பாடை பதினேட்டேயன்று பண்டைப் பரதகண்ட சாத்திரங்கள் பகர்ந்தவாறு கடந்து எத்தனையோ பாடைகளிஞ் ஞான்று காணப்படல் காலந்தோறும் கன்மதன்மங்கள் வேறுபடுமென்பதைக் காட்டுகின்ற தென்பதூஉம், அவ்வேறுபாட்டிற்கியையப் பன்முகத்தாலுந் தமிழ் பல்கு வழியினைத் தேடல் வேண்டுமென்பதூஉம், அப் பல்கலின்மையால் வடநாட்டிலும் மற்றை நாட்டிலுந் தமிழ் வேதப் பெருமையினையும் ஆக்கிய வருளாளர் பெருமையினையுமறியாக் குறையானது வடமொழி பிறமொழியென்பவற்றின் கண்ணவேயே விருப்பத்தையும் பிற மத வேட்கையையும் பெருமயக்கத்தையும் பெருக்கு கின்றதென்பதூஉம் தமிழ்நலன் இற்றென வறியாது

" இந்தி முதலிய வேறு பாடைகளை யிந்நாட்டகத்தும் விருத்தி செய்ய விழையும் வடநாடரது சுயநலத்தினை யாதரித்தல் தமிழர் கடன்மை யன்றென்பதூஉம் "

தலைவனருளற்புதமும், கண்டுகூறு முண்மையுமுட் கொண்டிலகு தமிழ்வேதம் இனிது வியாபிக்கின் இந்நிலவுலகெங்கணுஞ் சைவ சமயமே தலைப்படுமென்பதும், அஞ்ஞான்று ஆன்மலாப வவாவுடையா ரனைவரும் இவ்வுலகினை நேடாதிருக்க நியாய முற்றென்பதூஉம் இங்ஙனங் கொளக் கிடப்பனவாம்.
(திருப்பா நூன்முகம் பக்க.எ. 17.)

பாம்பன் அடிகளார் இந்நூன்முகத்தை புதுப்பாக்கமெனும் குமாரபுரத்தில் புதுப்பேட்டை அமீர் மகால் அருகில் தங்கி 26.7.1920ஆம் ஆண்டில் இரண்டாம் பதிப்பிலும் வரைந்திருக்கிறார்கள்.

1899ஆம் ஆண்டு இந்தி என்பது தமிழ்நாட்டில் திணிக்கப்படாத காலம். வடநாட்டினரின் இந்தியை திணிக்க முற்படும் உணர்வை முன் கூட்டியே அறிந்து பாம்பன் அடிகளார் எழுதியது வியப்பிற்குரியது.

எனவே, இந்தி எதிர்ப்பு வரலாற்றை எழுதுவோர் இனியாவது ஈ.வெ.ரா.பெரியாருக்கு முன்னரே இந்தி எதிர்ப்புக்கான விதை ஊன்றிய பாம்பன் அடிகளாரை இந்தி எதிர்ப்பு வரலாற்றின் பக்கங்களில் குறிப்பிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

(தகவல்: மு.வலவன் எழுதிய "முருகனைப் பாடிய மூவர்" நூலிலிருந்து.)
நன்றி: Kathir Nilavan

சொல்றவன் இல்ல; செய்றவன் தான் சேர்வை!

"சொல்றவன் இல்ல; செய்றவன் தான் சேர்வை!" - ஐவராட்டம் படத்தில் வரும் பஞ்ச்.

செஞ்சிட்டாய்ங்க...


                                                  படம்: பயமறியான் பாலா சேர்வை

நேதாஜியின் ஆவணங்களை வெளியிட்டமைக்கு நன்றி!

என் பெரிய தாத்தா தெய்வத்திரு. அ.பக்கிரிசாமித்தேவர் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் பணியாற்றியவர் என்ற வகையில், இதுநாள் வரை வெளியிடப்படாமலே மறைத்து வைத்திருந்த நேதாஜி பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிட்ட மாண்புமிகு மம்தா பானர்ஜிக்கு எம் நன்றிகள்!

17 செப்டம்பர் 2015

இரு துருவங்களும் ஒரே தேதியில்!

ஈ.வெ.ரா., மோடி என இரு துருவங்களும் ஒரே தேதியில் பிறப்பெடுத்த விநோதம் போன்றே பல அரசியல் பங்களிப்பார்கள் அடியேன் பிறந்த இந்த செப்டம்பரில் தான் பிறந்திருக்கிறார்கள் என்பது கூட ஒருவகையில் மகிழ்ச்சியே! விமர்சனம் செய்தாவது இவர்களையெல்லாம் காலம் கடந்து நினைவில் வைத்திருக்க போகிறது இந்த மானுட சமூகம். மறக்கமுடியுமா செப்டம்பரை?!

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
"நந்தி" மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே!
(விநாயகர் காப்பு, திருமந்திரம்)

                                     (எங்க நாகப்பட்டினத்தில், 32 அடி விஸ்வரூப விநாயகர் ஊர்வலம்)

இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!

16 செப்டம்பர் 2015

வேதை அகமுடையார் சங்க விழாவில்!

கூட்ட நெரிசல் நிறைந்த விழா சூழலிலும், அரை மணி நேரம் சமூகம் சார்ந்த வரலாற்று தகவல்களை பரிமாறி அண்ணன் பி.வி.ஆர் அவர்களோடு பேசிய இன்றைய நிகழ்வு மகிழ்வானது.

எளிமையான தலைமைத்துவம், அறிவார்ந்த கம்பீரம்! என்ற அடையாளம் கொண்ட வேதையின் மாவீரர் பி.வி.ஆர் அவர்களோடான சிறிய சந்திப்பும், பூர்வகுடி கருப்பம்புலத்து காரனாய் பெருமிதம் கொண்ட தருணங்களில் ஒன்றாய் அமைந்து போனது. இதற்கு உறுதுணையாய் இருந்த அனைத்து உறவினர்களுக்கும் நன்றி.

15 செப்டம்பர் 2015

அகமுடையார் குலத்தோன்றல் பி.யூ.சின்னப்பா!



தமிழ்த்திரை உலகின் முதல் சூப்பர் ஸ்டாரான அகமுடையார் குலத்தோன்றல் பி.யூ.சின்னப்பா அவர்களின் நூற்றாண்டு விழாவிற்கு சிலை திறப்பு உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகளை செய்யும் எம் உறவுக்கு வாழ்த்துகள்!

இருகுலத்தோரின் முயற்சி வெற்றி பெறட்டும்!



மறவர்களான முத்துவடுகநாதர், வேலுநாச்சியார், முத்துராமலிங்கத்தேவர் உள்ளிட்டோர் கள்ளர் மஹா சங்கம் மூலம் கள்ளராகி போனார்கள்! அகமுடையாரான மாமன்னர் மருதுபாண்டியர்களின் படம் பதிக்காமல் போனதற்கு வருத்தமேதுமில்லை. ஆனால் எங்களை தயவு செய்து முக்குலத்தோரிலும் அடைக்காமல் இருந்தால் மகிழ்ச்சி. மற்றபடி இந்த இருகுலத்தோருக்கும் அகமுடையார் சார்பாக எம் வாழ்த்துகள்! டெல்டாவில், வாட்டாக்குடி இரணியன், வலிவலம் தேசிகர், நாடிமுத்து பிள்ளை, மலேயா கணபதி, உமாமகேசுவர பிள்ளை, ஜாம்பவனோடை சிவராமன் உள்ளிட்ட பல போராளி தலைவர்கள் அகமுடையாரில் எக்கசக்கம் இருந்தும், அவர்களை மறந்த இருகுலத்தோரின் முயற்சி வெற்றி பெறட்டும்.

14 செப்டம்பர் 2015

சாதிக்கு பின்னாலுள்ள ஊழல்!



தன் பரம்பரை சொத்தையே சாதி வேறுபாடின்றி பிரித்து கொடுத்த பசும்பொன் தேவரின் படத்தை போட்டு, பாரம்பரிய மண்ணையே மலையோடு கூறுபோட்ட பி.ஆர்.பி.க்காக பரிந்து பேசுவது சரியா? கொள்ளையடிக்கிறவனுக்கும், கொலை பண்றவனுக்கும் சாதி தான் கடைசி அஸ்திரம் என்பதற்கு இந்த போஸ்டரும் ஓர் உதாரணம்.

குரு தெஷ்ணாமூர்த்தி சுவாமிகளின் 180 வது குருபூஜை விழா!




தாஜ்மகாலுக்கு முன்பாகவே ராஜேந்திர சோழன் தன் காதலி பரவை நாச்சியாருக்காக கோவிலே கட்டிய, பசுங்கன்றுக்காக தன் மகனையே தேர் சக்கரத்திலேற்றிய மனுநீதி சோழன் ஆண்ட திரு ஆரூர் - மடப்புரத்தில் குரு தெஷ்ணாமூர்த்தி சுவாமிகளின் 180 வது குருபூஜை விழா இன்று!

13 செப்டம்பர் 2015

கேவலமான சாதி சார்பு அரசியல்!

தெரிந்தே தப்புகளை செய்யும் தன் சுயசாதிக்காரனை தட்டிக்கேட்க வக்கில்லாதவனுக்கு மீசை மயிர் எதுக்கு? அது பி.ஆர்.பி.யோ? வைகுண்டராஜனோ? தன் சாதியில் பிறந்தவிட்டதால், தெய்வமாக வணங்கும் இயற்கை அன்னையின் உறுப்புகளை கதற கதற கற்பழித்து அறுத்தொழிக்கும் பாவமெல்லாம் புனிதமாகி விடுமா என்ன? வைகுண்டராஜனுக்கு நியூஸ் 7 தொலைக்காட்சி போன்ற ஓர் வலுவான ஊடகமாவது இருக்கு. ஆனால் பி.ஆர்.பி.க்கு அப்பாவி உயிர்களை நரபலி கொடுத்த சுடுகாடு தான் இருக்கு.

வேதாரண்யம் அகமுடையார் நலச்சங்கம்!



16.09.2015 அன்று திறப்புவிழா காணும் 'வேதாரண்யம் அகமுடையார் நலச்சங்கம்' ஒட்டுமொத்த சமுதாய முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும் தோள் கொடுத்து, சமூகத்தில் நிலையான புகழோடு நீடித்திருக்க என் குலதெய்வம் கடிநெல்வயல் வேம்படி ஐயனார் துணையிருக்க, பூர்வகுடி வேதாரண்யத்து காரனாய் எம் வாழ்த்துகள்!

அருகிலிருக்கும் அகமுடையார் உறவுகள் அனைவரும் தொடக்க விழா நிகழ்விற்கு வருக!

இன்னும் ஒருசில வாரங்களில், 'நாகை அகமுடையார் நலச்சங்கம்' அழைப்பிதழையும் இங்கு பகிர்வேனென நம்புகிறேன்.

11 செப்டம்பர் 2015

அகமுடையார் அரசியல்!


மூமுக போன்ற முக்குலத்து கட்சிகளிலும், ஐஜேகே போன்ற பார்கவகுல கட்சிகளிலும், புதியநீதிகட்சி போன்ற முதலியார் கட்சிகளிலும் பின்புலமாக, வேறுவழியின்றி உள்ளூர் அரசியல் பலத்திற்காக மாற்று அணிகளோடு இணைந்தே தங்களது சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து கொண்டிருக்கிறார்கள், அகமுடையார்கள்! முதலில் அகமுடையார்களாக ஒன்றிணைவோம்; அதுதான் காலத்தின் கட்டாயம், தேவையும் கூட.

மறக்க முடியாத செப்டம்பர் 11 !



அவன் தோற்றம் இராணுவம்
அதில் மீசைதான் அடையாளம்!
அவனுள் குடிபுகுந்தது வறுமை
அவனது எழுத்துக்குள்
ஆடம்பரமாய் பிறப்பெடுத்தது வீரம்!
ஆனந்த சுதந்திரம் அடையுமுன்பே
அதை அனுபவிக்க வைத்த தீர்க்கதர்சி!
அவன் பெயருக்குள்
எம்பெருமான் முருகன் இருப்பான்!
அவன் எழுத்துக்களால்
பாரெங்கும் தீப்பிழம்பாய்
என்றைக்கும் எம்மோடு இருப்பான்!
அவன் பார்ப்பான் தான்
எதையுமே அகண்டு விரிந்து
தொலைநோக்கோடு பார்ப்பான் தான்!
அவனது இறப்பு முப்பத்தெட்டு
அவன் எழுத்துக்கிங்கே மூப்பேது?

- இரா.ச.இமலாதித்தன்

’தேசிய மகாகவி’ சி.சுப்ரமணிய பாரதியின் 94ம் வருட வீர வணக்க நினைவேந்தல் நாள் இன்று. வீரவணக்கம்!

சாதியால் அவன் பார்பான் தான்; அகண்ட பிரபஞ்சத்தை தமிழறிவால் பார்பான் தான். தேசியம் - புரட்சி - ஆன்மீகம் - இலக்கியம் என பல பரிமாணங்களில் முத்திரை பதித்த எங்கள் சுப்ரமணிய பாரதியை போற்றுவோம்.

10 செப்டம்பர் 2015

அகமுடையார் பட்டங்களில் சில!

அகமுடையார் வரலாறு சொன்னால், மற்றவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது? அன்று முதல் இன்று வரை எங்களுக்கு புதுப்புது பெயர் கிடையாது பட்டம் தான் வேற வேற. என்றைக்குமே நாங்க அகம்படியர்களே!

தேவர்
சேர்வை
முதலியார்
பிள்ளை
உடையார்
மணியக்காரர்
அதிகாரி
தந்துடையார்
மாவடியார்
பல்லவராயர்
வாணாதிராயர்
நாட்டார்

அம்பலம்
நாயக்கர்

இது போன்ற பட்டங்கள் பல உண்டு. ஆனாலும், என்றைக்குமே அகம்படியர்கள் போர்குடியினரே.

போர்க்குடியில் பிறந்த அனைவருமே ஷத்ரியர்கள் தான். இதுல நாங்க மட்டும் தான் வெள்ளைக்காரனிடமும், பார்பானிடமும் அக்மார்க் சான்றிதழ் வாங்கிய ஷத்ரியர்கள் என்று யாரும் அந்த வீரத்தை குத்தகைக்கு எடுக்க முடியாது.
ஷத்ரிய குல அகம்படியர்கள்! என்று அரசாங்கத்திடம் பெயர் மாற்றம் செய்தால் அந்த கணக்கும் சரியாயிடும்.

அகமுடையார் குல வேட்டவலம் ஜமீனை மாற்றும் பொய் வரலாறு!



குதிரையோட பிறந்தார், நெருப்பில் உதித்தார்ன்னு கட்டுக்கதை அளக்கும் போதே தெரியுதே, எப்படிப்பட்ட வரலாறு இதுவென... சும்மா சொல்லக்கூடாது, பத்து பாக்யராஜ்யோட திறமையுள்ள ஒருவரால் பல புனைக்கதைகள் எழுதலாம். பச்சை குதிரையுடன் பிறந்து, அரக்கர்களை அழித்தாராம் திருமுடிக்காரி. இதையெல்லாம் வரலாறுன்னு சொன்னா வாய்லேயே மிதிப்பானுங்க.

அகம்படி குல ஷத்ரியர்கள்!

யார் சர்டிஃபிகேட் கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அகம்படியர் போர்குடியினரே. இந்த பார்பன ஷத்ரிய வைசிய சூத்திர வர்ணாசிரம போதையெல்லாம் எங்களுக்கு தேவையில்லை. போலி வரலாற்று பெருமைகளும் எங்களுக்கு தேவையில்லை. வேட்டவலம் ஜமீன்தாரர்கள் சொல்லட்டும், நாங்க அகம்படி குடி அல்ல யென்று. மற்றபடி சிவகரி ஜமீன் கதை போல காதை சுற்றி மூக்கை தொட வேண்டாம். உடையார்களுக்கும், அகமுடையார்களுக்கும் வரலாற்று ரீதியான தொடர்புண்டு. குறிப்பாக மலையமான் உடையார்களோடு. அதற்கு உண்மையான சான்றும் அதிகமுண்டு. வானாதிராய மதுரையே, மானாமதுரை ஆனது. மானாமதுரையின் பூர்வகுடிகள், அம்மண்ணை அரசாண்ட சேரர் வழிவந்த அகம்படியர்களே!

அகம்படி கல்வெட்டு ஆய்வு!

திருவண்ணாமலைக்கு அருகிலுள்ள வேட்டவலம் ஜமீன், அகமுடையார் ஜமீனாகும். வாணாதிராய முதலி பட்டமுள்ள அகம்படி வகுப்பினர் இவர்கள்.

நிர்வாக ஆலோசனையாளராக, அகம்படியர்!



இரண்டாம் கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டு சிதம்பரம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் திருப்பணிக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நடராஜர் கோயில் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் திருப்பணி கல்வெட்டினை அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை துணைப் பேராசிரியர்களும், திராவிட வரலாற்று ஆய்வுக்கழக ஆய்வாளர்களுமான இல.கணபதிமுருகன், ஆ.முத்துக்குட்டி ஆகியோர் கண்டெடுத்துள்ளனர். கல்வெட்டு குறித்து ஆய்வாளர் இல.கணபதிமுருகன் தெரிவித்ததாவது:
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் கிழக்கு கோபுர வாயிலின் வழியாக செல்லும் போது துவார ஸ்கந்தன் சன்னதிக்கு வடபுறம் இருக்கும் நுழைவாயில், இடது நிலைவாயில் பகுதியில் காடவர் குல சிற்றரசரான இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் (கிபி 1243-1279) கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பணி கல்வெட்டு:

"ஸ்வஸ்தி ஸ்ரீ அவனி ஆளப்பிறந்த கோப்பெருஞ்சிங்கருக்காக திருநிலைக்கால் செய்வித்தார். வர முதலிகளில் பெருமாளப் பிள்ளை யான சோழக்கோனார்" என்பதே நடராஜர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு வரிகளாகும். கல்வெட்டு குறிக்கும் கோப்பெருஞ்சிங்கன் காடவர் குல குறுநில மன்னன் ஆவான். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கே 'அவனி ஆளப் பிறந்தான்' என்ற பட்டப்பெயர் இருந்தது.

அவனி ஆளப்பிறந்தான் என்ற பட்டப் பெயர்:

நடராஜர் கோயில் கல்வெட்டில் குறிக்கப்படும் கோப்பெருஞ்சிங்கன், இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனை என்பதை 'அவனி ஆளப் பிறந்தான்' என்ற கல்வெட்டு வரி வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனுக்கு நிர்வாக ஆலோசனை கூற அகம்படி முதல் என்ற நிர்வாகக் குழு உதவிவந்தது. கல்வெட்டில் வர முதலி என குறிக்கப்படும் பெருமாள் பிள்ளையாகிய சோழகோனார் அத்தகைய நிர்வாகக்குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவனாவான். எனவே கோப்பெருஞ்சிங்கனின் ஆணைப்படி வர முதலி, கோயிலின் திருநிலைக்காலை செய்வித்த நிகழ்வானது இக்கல்வெட்டின் வாயிலாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை கண்டறியப்படாத கல்வெட்டு:

சோழர் யார்?

குறும்பர்(காடவர்+பல்லவர்)களை சோழமன்னன் இரண்டாம் கரிகாலன் போர் செய்து நாட்டை விட்டு துரத்தினானென இந்த பாடல் சொல்கிறது. அப்படியெனில் சோழர் யார்?

09 செப்டம்பர் 2015

குடமுழுக்கு’கள்!

டெல்டா பகுதியில், திருமுருகன் வீற்றிருக்கும் கும்பகோணம் - சுவாமிமலை கோவில், பொங்குசனீஸ்வரர் வீற்றிருக்கும் திருத்துறைப்பூண்டி- திருக்கொள்ளிக்காடு கோவில் உள்ளிட்ட மிக அற்புதமான அருள்நிறைந்த பெரும்பாலான கோவில்களுக்கு இன்று குடமுழுக்கு. அதிலும் குறிப்பாக, 1780 முதல் 1801 வரை சிவகங்கை சமஸ்தானத்தை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களால், மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரம் தெரியுமளவுக்கு காளையார்கோவிலில் கோபுரம் அமைத்த சொர்ணகாளீஸ்வரர் ஆலயத்திலும் இன்று குடமுழுக்கு!

தெய்வங்களின் மணநாள்!


                                        (திருமதி இந்திரா - இரா.சம்பந்தம் தேவர் )

இன்று, என்னை பெற்றெடுத்த தெய்வங்களின் மணநாள்!

அகம்படி குல பாம்பன் சுவாமிகள்!







அகம்படியர் குலத்தில் தோன்றிய தீவிர திருமுருக பக்தரான சித்தர் பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி திருவான்மியூரில் அமைந்துள்ளது. சண்முக கவசம், பகை கடிதல், இரத பந்தம், பஞ்சாமிர்த வண்ணம், குமார ஸ்தவம், சண்முக நாமாவளி என பல ஆன்மீக எந்திர சூத்திரங்களை உருவாக்கியவர். ஒவ்வொரு திருமுருகன் ஆலயத்திலும், பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் எந்திரம் கோவில் உட்புற சுவரில் இருக்கும்.

08 செப்டம்பர் 2015

ஆண்ட பரம்பரையென்ற போலியான புகழ் தேவையில்லை!



டெல்டாவில் எந்தவொரு சாதி அரசியலும் தலை தூக்க வாய்ப்பே இல்லை என்பதற்கு வடசேரி நிகழ்வும் ஓர் உதாரணம். அது கள்ளரோ, அகமுடையரோ, பள்ளரோ, பறையரோ, வன்னியரோ, முத்தரையரோ, வெள்ளாளரோ யாருமிங்கே சாதியரசியலில் களம் கண்டு இங்கு வெல்லவே முடியாது. துயரம் என்னவெனில், வடசேரியை சேர்ந்த அகமுடையார் இளைஞர்கள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது என்பதுதான்.

விவேகமில்லாத வீரமும், வீரமில்லாத விவேகமும் எதற்கும் உதவாது. என்னைக்கோ ஒருத்தன் அவனது குடும்பம் மட்டும் மன்னராக இருந்ததால் அவன் என் சாதியென்ற வரலாற்று சான்றுகளை வைத்து கொண்டு, அரசாண்ட பரம்பரை என்ற பீற்றல்களால் இனியொரு மயிரும் ஆகப்போவதில்லை.

அன்றைய காலக்கட்டத்தில், அரசாட்சியை காப்பாற்றி கொள்ள சாதிவேறுபாடின்றி அனைவரோடும் மண உறவு கொண்டனர். அதனால் இங்கே கல்ப்பில்லாத ஒரே சாதியை சார்ந்த மன்னர் வழிவந்த சுத்த இரத்தமுள்ள ஆண்ட சாதி எதுவுமில்லை. முடிந்தால் அறிவால் இந்த அரசை ஆளுங்கள், அரச பதவியோடு. இந்த வருட இறுதிக்குள் தமிழகரசு தேர்வாணையத்தின் மூன்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள் நடைபெறவுள்ளது. தேர்வில் வெற்றி பெற்று, அனைவரும் அரச பதவியை வகிக்க விவசாயி மகனாக எம் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

05 செப்டம்பர் 2015

இனிய ஆசிரியர்தின வாழ்த்துகள்!

சம்பளம் மட்டும் குறிக்கோள் இன்றி, சேவை மனப்பான்மையோடு, மாணவர்களை யெல்லாம் தன் குழந்தையெனவே பாவித்து, ஏட்டுக்கல்வியை மட்டுமில்லாமல் உலகறிவையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் நேர்மையாளர்களுக்கு இனிய ஆசிரியர்தின வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்.

வ.உ.சி. என்ற வெள்ளாளர்!

தமிழார்வமிக்க வழக்குரைஞராக இருந்தும் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த தன் தாய்நாட்டுக்காக பலரிடம் பணம் திரட்டி சுதேசி கப்பலை ஓட்டி, ஆங்கில வணிகத்திற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்ததால் சிறை தண்டனை பெற்றும் கூட, வாழ்நாளில் கடைசிகாலத்தில் வறுமையால் அவதிப்படும் போது, தோள்கொடுக்க யாருமில்லை.

இப்போது கூட அவரது பேரன் குடும்பம் பொருளாதார ரீ்தியாக கஷ்டப்படும் கூட யாரும் உதவிட முன்வரவில்லை. சமீபத்தில் தான் அரசாங்கம் கூட பொருளாதார உதவியை செய்தது. ஆனால் வ.உ.சி என்ற பெயரை பயன்படுத்தி பேரவை, இயக்கம் என புற்றீசல் போல இன்று பல வெள்ளாளர் பிள்ளைமார் சாதி சங்கங்கள் உருவாகி விட்டன. 

எங்க நாகப்பட்டினத்தில் கூட இன்று காலை 9 மணிக்கு பேருந்து நிலையம் அருகே பெரிய பதாகையுடன் கூடிய வ.உ.சி படத்திற்கு, அனைத்து வெள்ளாளார் பிள்ளைமார் சங்கத்தினர் மாலை அணிவித்தனர். தங்கத்தாலும் ஆகாது, இது போன்ற இலக்கில்லா சங்கத்தாலும் ஒன்னும் ஆகாது என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது. தேசிய தலைவரையெல்லாம் சாதி தலைவராக்கி பதவி சுகம் அனுபவிக்கும் சுயநலவாதிகள் நிறைந்த உலகில் வேற எதையும் எதிர்பார்க்க முடியாது!

- இரா.ச.இமலாதித்தன்